வெள்ளை மாளிகையை கறுப்பு வெள்ளையாக்கு.. நிற வெறிக்கு எதிராக சீறிய வைரமுத்து..

மெரிக்காவில் சமீபத்தில் நிற வெறிக்கு கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் போலீஸ் அதிகாரியால் காலில் கழுத்தில் மிதித்து கொலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில் அந்த கருப்பினத்தவர் கடைசியாக ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை’ என்று கதறினார். அப்படியே அவர் உயிர் பிரிந்தது. இது நிற வெறிக்கு எதிரான போராட்டமாக உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.


கழுத்தில் அமெரிக்கப் போலீஸ் கால்வைத்து அழுத்தியதில் அவர் இறந்து போனார். அந்த கோபத்தை மனதில் தேக்கிவைத்து கவிப் பேரரசு வைரமுத்து காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை’ என்ற பாடல் எழுதியிருக்கிறார். ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். அதில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு கருப்பு வெள்ளை நிறம் மாற்றுங்கள் என குமுறியிருக்கிறார்.
இப்பாடல் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் உலகம் முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதோ தமிழ் கவிஞனின் ஆக்ரோஷ குரல்…
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
என் காற்றின் கழுத்தில் – யார்
கால்வைத்து அழுத்துவது?
சுவாசக் குழாயில் – யார்
சுவர் ஒன்றை எழுப்பியது?
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
*


எத்தனை காலம் விலங்குகள் இறுகும்?
எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்?
ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா?
தோலைப் பார்த்துக் காற்று வீசுமா?
காக்கையும் உயிரினம்
கருமையும் ஒரு நிறம்
எல்லா மனிதரும் ஒரே தரம்
எண்ணிப்பாரு ஒரு தரம்
மாளிகை நிறத்தை மாற்றுங்கள் – ஒரு
பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்
நீங்கள் பகல் நாங்கள் இரவு
இரண்டும் இல்லையேல் காலமே இல்லை
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
இவ்வாறு வைரமுத்து தனது பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பாடல் நெட்டில் வைரலாகி இருக்கிறது.