மலையாள திரையுலகில் பழம்பெரும் நடிகரான பி.சி.சோமன், வயது மூப்பின் காரணமாக இன்று காலை 4 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 81.

நடிகர் சோமன் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பிற்காக ஸ்வயம்வரம், விதியன், மதிழுகள் உள்ளிட்ட படங்களுக்காக விருதுகளை பெற்றுள்ளார்.

கவுரவர், துருவம், ஃபயர்மேன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, சோமனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மம்மூட்டியுடன் இவர் நடித்த ஃபயர்மேன் படத்திற்கு ரசிகர்கள் ஏராளம். அந்த படத்தில் இவரது பாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது.