மூத்த மராத்தி நடிகர் ஜெய்ராம் குல்கர்னி காலமானார்…

புனே:

மூத்த மராத்தியமொழி நடிகர் ஜெய்ராம் குல்கர்னி புனேவில் இன்று  காலமானார். அவருக்கு வயது 88.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்,. இன்று காலை  உயிரிழந்ததாக என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஜெய்ராம் குல்கர்னிக்க மனைவி, மகன் மருமகள்  மருமகள் மிருணல்  குல்கர்னி ஆகியோரும் உள்ளனர்.

சோலாப்பூர் மாவட்டத்தில் பார்ஷி தெஹ்ஸில் பிறந்த குல்கர்னி, சால் ரீ லக்ஷியா மும்பைலா, ஆஷி ஹாய் பன்வபன்வி, தாரதரத், ரங்கத் சங்கத் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படம் கெல் ஆயுஷ்யாச்சா சமீபத்தில் வெளியிடப்பட்டது.

நடிப்பில் முழுநேர வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, குல்கர்னி புனேவில் உள்ள ஆகாஷ்வானியில் பணிபுரிந்தார், அங்கு அவர் இலக்கியம், நாடகம் மற்றும் திரைப்படத் துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடன் தொடர்பு கொண்டார்.

அவரது இறுதி சடங்குகள் இன்று பிற்பகுதியில் புனேவில் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.