கேரளா : முன்னாள் அமைச்சர் கே எம் மாணி மரணம்

 

கொச்சி

முன்னாள் கேரள மாநில நிதி அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான கே எம் மாணி இன்று மாலை மரணம் அடைந்தார்.

மூத்த அரசியல்வாதியான கே எம் மாணி முன்னாள் நிதி அமைச்சரும் ஆவார். இவர் நிதி அமைச்சராக கேரள சட்டப்பேரவியில் 13 முறை நிதிநிலை அறிக்கை அளித்துள்ளவர் என்னும் புகழை அடைந்தவர் ஆவார். இவர் கேரள காங்கிரசின் ஒரு பிரிவாக செயல்பட்ட காங்கிரஸ் (எம்) பிரிவின் தலைவர் ஆவார்.

மாணி கேரள சட்டசபையில் நீண்ட நாள் உறுப்பினராக இருந்துள்ளார். அது மட்டுமின்றி கேரள அரசில் அமைச்சராக பணி புரிந்துள்ளார். கடந்த 1965 ஆம் ஆண்டில் இருந்து பாலை சட்டப்பேரவை தொகுதிக்கு பல முறை தொடர்ந்து உறுப்பினராக மாணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுமார் 86 வயதாகும் மாணி கடந்த சில காலமாக வயது காரணமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் அவதிப்பட்டு வந்த மாணி கடந்த ஞாயிற்றுக் கிழமை மூச்சுத் திணறலால் கடுமையாக பாதிப்படைந்தார். அதை ஒட்டி அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று அவரை கேரள முதல்வர் பிணராயி விஜயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனை அதிகாரிகள் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆயினும் இன்று மாலை கே எம் மாணி மரணம் அடைந்தார். அவரது மறைவு கேரள மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ள்து.

Leave a Reply

Your email address will not be published.