சின்னசேலம் பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரி: கால்நடைத்துறை அமைச்சர் தகவல்

சென்னை:

சேலம் அருகே  சின்னசேலம் பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக கால்நடைத்துறைணு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

இன்று கள்ளக்குறிச்சி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சின்னசேலம் பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க முதல்வருடன் பேசி ஆவன செய்யப்படும் என்று கூறினார்.

மேலும், அமெரிக்க கால்நடை பல்கலை கழக ஒப்பந்தத்துடன் வி.கூட்ரோடு ஆட்டு பண்ணை முன்மாதிரி பண்ணையாக தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.