சென்னை

ழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு இன்று சென்னையில் மரணம் அடைந்தார்.

நடிகர் டைப்பிஸ்ட் கோபு திருச்சியை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் கோபிரத்தினம். கடந்த 1959 ஆம் வருடம் இவர் தனது நன்பர் நடிகர் நாகேஷின் நாடகக் குழுவில் தனது நடிப்பை தொடங்கினார். இவர் முதலில் நடித்த ‘நெஞ்சே நீ வாழ்க’ என்னும் நாடகத்தில் டைபிஸ்ட் வேடத்தில் நடித்தார். அன்றிலிருந்து இவர் பெயருடன் டைப்பிஸ்ட் என்பது ஒட்டிக் கொண்டது.

அதன் பிறகு பல நாடகங்களில் டைப்பிஸ்ட் கோபு நடித்துள்ளார். இயக்குனர் கே பாலசந்தர் இவரை தனது நாணல் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். அதன் பிறகு பல படங்களில் இவர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். அதன் பிறகும் இவர் சோ மற்றும் ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

தற்போது 85 வயாதாகும் இவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். இன்று காலை மருத்துவர்கள் கை விட்டதால் இவர் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இன்று தனது இல்லத்தில் டைப்பிஸ்ட் கோபு  மரணம் அடைந்தார்.

டைப்பிஸ்ட் கோபுவின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு இவர் வீட்டில் இருந்து நடைபெற உள்ளது. இவரது இல்லம் அயப்பாக்கத்தில் அர்சு உயர்நிலைப்பளி அருகில் உள்ள ஆறாம் பிரதான சாலையில் 3138 என்னும் எண்ணில் அமைந்துள்ளது.