ஷாரூக்கான் பிறந்தநாள் விழாவில் வெற்றிமாறன், அட்லி…!

நடிகர் ஷாரூக்கான் கடந்த 2ம் தேதி தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

உலகமெங்கும் உள்ள ஷாரூக்கான் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வண்ணம் ட்விட்டரில் ஹேஷ்டேகுகள் இட்டு ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் உலகின் மிக உயரமான கட்டிடம் என புகழப்பட்டும் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா ஷாரூக்கானை வாழ்த்தும் வகையில் தன் கட்டிடத்தில் லேசர் விளக்குகளால் ‘Happy Birthday Shah Rukh Khan – The King of Bollywood Cinema” என அலங்கரித்திருந்தனர் .

திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார் ஷாரூக்கான். அதில் இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார். இரண்டு இயக்குநர்களும் ஷாரூக்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

கார்ட்டூன் கேலரி