வெற்றிமாறன் இயக்கத்தில் ‘சூர்யா 40’….!

--

வெற்றிமாறன் இயக்கத்தில் , தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தக் கூட்டணியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, “அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் ‘சூர்யா 40’ படத்தைத் தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார் தாணு .

சூர்யா – வெற்றிமாறன் இருவருக்குமே அட்வான்ஸ் தொகையைக் கொடுத்துக் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார் தாணு .