‘பாரம்’ படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்…!

18 நாள்களில் எடுக்கப்பட்ட ‘பாரம்’ தமிழ்த் திரைப்படத்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் பிரியா கிருஷ்ணசாமி.

இன்னும் வெளியாகாமல் உள்ள இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட உள்ளார்.

நான் ‘பாரம்’ படத்தைப் பார்த்தபோது ஏதோ ஒருவகையில், இப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். அதை வழங்கவும் முடிவு செய்தேன். ‘பாரம்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார் வெற்றிமாறன் .