வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் விரைவில் ஆரம்பம்…!

ஆர்.எஸ்.இன்ஃபோடையின்மண்ட் நிறுவனம் தயாரிப்பில் , வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘வாடிவாசல்’.

‘அசுரன்’ படத்தைத் தயாரித்த தாணு, சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.வாடிவாசல் என்ற குறுநாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதி 1959-ம் ஆண்டு வெளியானது.

சில மாதங்களுக்கு முன்பாக, சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவல் உரிமையை வெற்றிமாறன் கைப்பற்றியிருந்தார். அதனைத் தான் சூர்யாவை வைத்து படமாக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/Off_Vetrimaaran/status/1297409477621104640?s=19

கொரோனா ஊரடங்கால் அணைத்து படப்பிடிப்புகளும் முடங்கி கிடந்தது . இந்நிலையில் மத்தியஅரசு சில விதிமுறைகளுடன் படப்பிடிப்பு தொடங்கலாம் என கூறியிருந்ததை அடுத்து வெற்றிமாறன் வாடிவாசலுக்கு தயார் என கூறியுள்ளார் .