றைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதாக சொல்லப்படும் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்ட வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிந்துள்ள  நிலையில் அவர் கைதாகக்கூடும்  என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை இன்று வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியவை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். நாளை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில், இன்று வீடியோ வெளியிடப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து  தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெற்றிவேல் மீது ’126 பி’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய  தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் வெற்றிவேல் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.