அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ‘மாஸ்டர் ‘ படத்தின் ரிலீஸ் ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு மட்டுமே சம்பளமாக 80 கோடி ருபாய் தரப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதன் இசை வெளியீட்டு விழாவே பிரம்மாண்டமாக இருந்தது .

தற்போது கொரோனா காரணமாக சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனால் மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகத்திற்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது . அன்று ரிலீஸாகியே தீரும் என அறிவித்துள்ளது .

மாஸ்டருக்கு போட்டியாக சூர்யா நடித்த சூரரை போற்று படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் தற்போது எந்த சத்தமும் இல்லாமல் உள்ளது .

இந்நிலையில் ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் படத்திற்கு போட்டியாக ஆர்கே சுரேஷ் நடித்துள்ள வேட்டை நாய் படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். RK சுரேஷ் தீவிர அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.