ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விஹெச்பி, பஜ்ரங்தள்….வன்முறை தலைதூக்கியது

உதைப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் கடந்த 8ம் தேதி இஸ்லாமிய கான்ட்ராக்டர் ஒருவர் ராஜாஸ்மந்த் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200 இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்ட பேரணி நடந்தது.

இந்த கண்டன பேரணியில் தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக விஹெச்பி மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் தொடர்பாக 200 பேர் கலந்துகொண்ட வீடியோ ஆதாரம் இருந்தும் 12 பேர் மட்டுமே கைது செய்யபப்ட்டனர் என்றும் குற்றம்சாட்டினர்.

இதை கண்டித்து 14ம் தேதி விஹெச்பி, பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது உதைப்பூர் நீதிமன்ற கட்டடத்தின் மீது காவி கொடியை ஏற்ற இந்துத்வா அமைப்புகள் முயற்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 30 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த 107 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து கடந்த 19ம் தேதி காக்ரோல் பகுதியில் சர்ச்கைக்குறிய இடத்தில் இருந்த ஹனுமர் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து நேற்று விஹெபி அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிந்தர் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவுக்கு இந்த போராட்டம் நடந்தது. இதில் லவ் ஜிகாத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இன்று சலும்பார் பகுதிக்கு விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினரின் போராட்டம் நீடித்தது. இந்த பகுதியில் தான் சமீபத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று இஸ்லாமியிர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே இடத்தில் இன்று விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. ராஜஸ்தான் மேவார் பகுதி என்று அழைக்கப்படும் தெற்கு மத்திய பகுதியில் பில்வாரா, சிட்டோர்கர், ராஜாஸ்மந்த், உதைப்பூர். ஜவஹர்லால் மாவட்டத்தை சேர்ந்த பிராவா தெஹ்சில் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளது. இந்த பகுதியில் தற்போதே தேர்தலுக்கு தயாராகும் வகையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.