லக்னோ:

அயோத்தியில் ராமர் கோவில் என்ற பெயரில் விஹெச்பி ஆயிரத்து 400 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமர் கோவில் விவகாரத்தில் தொடர்புடைய நிர்மோகி அகரா என்ற அமைப்பு இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் உறுப்பினரான சீதாராம் என்பவர் கூறுகையில், ‘‘ராமர் கோவிலுக்காக நிர்மோகி அகரா ஒரு பைசாவை கூட யாரிடமும் இருந்து வாங்கவில்லை. ஆனால். விஹெச்பி நன்கொடை என்ற பெயரில்   ராமர் கோவில் கட்ட மக்களிடம் நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை தங்களது சொந்த கட்டடங்களை கட்ட விஹெச்பி பயன்படுத்தியுள்ளது.

ராமர் கோவில் விவகாரத்தில் நாங்கள் தான் முக்கிய அங்கத்தினர். ஆனால், இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் தங்களது நலனுக்காக பயன்படுத்தி கொண்டுள்ளனர். இந்த பணத்தை பயன்படுத்தி ஆட்சியை அமைத்துவிட்டார்கள். இதில் ஒரு பைசா கூட ராமர் கோவில் கட்ட பயன்படுத்தவில்லை. ராமர் கோவில் என்ற பெயரில் அரசியல்வாதிகள் ரூபாய் நோட்டுக்களையும், ஓட்டுக்களையும் வாரி சுருட்டிக்    கொண்டுள்ளனர். ஆனால், அதற்கு எதுவும் செய்ய மறுக்கிறார்கள்’’ என்றார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த விஹெச்பி தலைவர் வினோத் பன்சால் கூறுகையில், ‘‘ ஒவ்வொரு பைசாவுக்கும் எங்களிடம் கணக்கு இருக்கிறது. இது 1964ம் ஆண்டு முதல் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.

வாழும் கலை நிறுவனம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அயோத்திக்கு பயணம் செய்ததை தொடர்ந்து இது போன்ற சர்ச்சகைள் தற்போது கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.