இஸ்லாமிய பெண்கள் மதம் மாறி இந்துக்களை திருமணம் செய்ய வேண்டும்….விஹெச்பி

டில்லி:

இஸ்லாமிய பெண்களை மதம் மாறி இந்து ஆண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விஹெச்பி தலைவர் சாத்வி பிராச்சி கூறிய கருத்து பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘மதம் மாறுவதன் மூலம் இஸ்லாமிய பெண்கள் முத்தலாக், ஹலாலா போன்ற நடைமுறையில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். இந்து மதத்திற்கு மாறுவதால் வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல், துன்புறுத்தல் இல்லாமல் வாழலாம். ஹலாலா முறையை பின்பற்ற கூறி மிரட்டும் மத குருமார்களை அடித்துவிட்டு மதத்தை விட்டு வெளியேற வேண்டும். இஸ்லாம் ஒரு ஆபத்தான மதம்.

பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. குழந்தை பெற்றெடுக்கும் பெண்களை ஏன் கோவிலுக்கு சாமி கும்பிட அனுமதி மறுக்கப்படுகிறது. இது போன்ற நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டும். ராமர் கோவில் அரசியல் விவகாரம் கிடையாது. இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர். ராமர் கோவில் கோடி கணக்கான மக்களின் நம்பிக்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. 2019ம் ஆண்டில் நிச்சயம் கட்டப்படும்’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி