சென்னை:

விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் வர தடை விதிக்க வேண்டும் என  கருணாஸ், தமிமுன் அன்சாரி, தணியரசு ஆகிய அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கொடுத்திருந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்ள சபாநாயகர் மறுத்துவிட்டதால், கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், சட்டப்பேரவையில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தை சபாநாயகர் தனபால்  ஏற்க மறுத்துவிட்டார்.

இதனையடுத்து கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகிய 4 எம்.எல்.ஏ க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்தியாவில் ராமராஜ்ஜியம் உருவாக்குவோம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்ற முழக்கத்தோடு விஸ்வ இந்து பரீஷத்  கேரளாவில் இருந்து ரத யாத்திரையை தொடங்குகிறது. இந்த யாத்திரை தமிழகத்திலும் பல இடங்கள் வழியாக செல்வதாக திட்டமிப்பட்டுள்ளது.