இன்றைய “நீயா நானா” நிகழ்ச்சி நிறுத்தம்

இன்று (22.10.2017) அன்று ஒளிபரப்பாக இருந்த நீயா நனா நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

விஜய் தனியார் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நீயா நானா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியை ஆண்ட்டனி என்பவர் தயாரிக்கிறார்.

சமுதாயத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் நிகழ்ச்சி என்று சொல்லப்பட்டாலும் அவ்வப்போது சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. இந்த வரிசையில் நாளைய நீயா நானா நிகழ்ச்சியும் சேர்ந்துள்ளது

. “அழகானவர்கள் – கேரளப்பெண்களா, தமிழகப்பெண்களா” என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாவதாக ப்ரமோ வெளியானது. . இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பெண்ணுரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி, மனிதி பெண்ணிய அமைப்பினர் நாளை ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் சென்று, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்த சூர்யாவிடம் பேசினோம். அவர், “நாட்டில் ஏற்கெனவே நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அதைப்பற்றிப் பேசாமல் பெண்களை அழகுப்பொருளாக சித்தரித்து விவாதம் நடத்துவது மோசமானது. அந்த பிரமோவிலேயே பெண்கள் அதீத ஒப்பனைகளுடன் காணப்படுகிறார்கள்.

பெண்களின் அறிவாற்றல் செயல் திறமை குறித்து விவாதம் நடத்தாலம். ஆனால் இதுபோ அழகப்பதுமையாக காண்பித்து பின்னோக்கி நகர்த்துகிறார்கள். இது குறித்து அந் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஆண்டனியிடம் பேசியபோது, “இப்போதைக்கு இதுதான் டிரண்ட்” என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிறார்.

நிகழ்ச்சியின் கோபிநாத்திடம், “நிகழ்ச்சியைப் பாருங்க.. பாஸிட்டிவாத்தான் சொல்றோம்” என்கிறார். நிகழ்ச்சி முழுதும் அழகு, அழகு என்று பேசிவிட்டு, அதற்கேற்றாற்போல கலந்துகொள்வோரையும் டியூன் செய்துவிட்டு, முடிவில் ஓரிரு நிமிடம் , “அழகைப் பார்க்காதீர்கள்.. ஆற்றலைப் பாருங்கள்” என்று அறிவுரை கூறுவார்கள்.

இதெல்லாம் பெண்களுக்கு எதிரான செயல்களே. ஆகவேதான் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நாளை புகார் அளித்தோம். இதையடுத்து நிகழ்ச்சியை நிறுத்தி வைப்பதாக விஜய் டிவி அலுவலகம் தெரிவித்திருக்கிறது” என்றார் சூர்யா.