விபூதி (திருநீறு) எந்தெந்த விரல்களால் விபூதியை பூசலாம்!

 

விபூதி (திருநீறு) எந்தெந்த விரல்களால் விபூதியை பூசலாம்! 

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

viputhi1

“நீறில்லா நெற்றி பாழ்” என்று பெரியவர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம் நாம். நெற்றியில், அவரவர் சம்பிரதாயத்தைப் பற்றி விபூதியோ, திருமண்ணோ இட்டுக் கொள்வது  இந்து தர்மத்தில் கட்டாயம்.

பெண்கள் கட்டாயம் திலகமிட்டுக் கொள்ள வேண்டும்.

சிவனாரை முழுமுதற்கடவுளாகக் கொண்டாடும் சைவர்கள் விபூதி பூச வேண்டியது மிகக் கட்டாயமான ஒன்று. இந்தப் பதிவில்,  திருநீறு, பஸ்மம் என்றெல்லாம் வழங்கப்படும்

விபூதி என்று அழைக்கப்படும் திருநீறு குறித்த மகிமையைப் பார்க்கலாம்.

அம்பிகையின் பிரபாவங்களை பேசும் தேவி பாகவதம், விபூதி அணிந்தவன், அம்பிகையின் திருவருளுக்குப் பாத்திரமாகி, பிறவிக்குக் காரணமான பாசம் நீங்கி, சிவலோகம் அடைவான் என்று போற்றுகிறது.

விபூதி, பசுவின் சாணத்தை, நெருப்பில் தகிப்பதால் உண்டாகும் பஸ்மமே விபூதியாக உபயோகிக்கப்படுகிறது.

விபூதி தரிப்பதையே சிரோ விரதம் என்று வேதங்கள் கூறுகிறது.

விபூதி பூசுவதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று அப்படியே பூசுவது. இதை உத்தூளனம் என்பார்கள்.

மற்றொன்று  மூன்று கோடுகளாக அணிவது, அதற்கு திரிபுண்டரம் என்பார்கள்.  அதாவது நீரில் குழைத்து பட்டையாக பூசுவார்கள்.

சைவத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று விபூதி தரித்தல்.

viputhi

திருஞானசம்பந்தப் பெருமான், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் எரித்துச் சாம்பலாக்கிய பின் எஞ்சுவது நீறு என்று அருளியிருக்கிறார்.  

மாசுகளற்ற  நிலைக்கு ஒரு குறியீடாக விபூதி கூறப்படுகிறது.

இன்னொரு விதமாகப் பார்த்தால், இந்த உடல் இறந்த பின் வெந்து சாம்பலாகப் போகிறது என்னும் வாழ்வின் நிலையாமைத் தத்துவத்தை எடுத்துச் சொல்லும் செயலாகவும் விபூதி பூசுதலைக் கொள்ளலாம்.

ஆணவமில்லாமல், இறைத் தத்துவத்தை ஏற்று நடத்தலை, நமக்குப் போதிப்பதே விபூதி பூசுதல்.

விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும் போது,

நெற்றில் விபூதி பூசுவதால், தலையில் நீர் கோத்துக் கொள்ளும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகிறோம்.

vibuthi2

 

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது அதீத நன்மைகளும் ஏற்படும்.

ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

கட்டை விரல்: கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரல்: ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட்கள் நாசம்.

நடுவிரல்: நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.

மோதிர விரல்: மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

சுண்டு விரல்: சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

மோதிர விரல் – கட்டை விரல்: மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே வசப்படும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும் என்று ஆன்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.