பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பது ஆளுநரே: அமைச்சர் அன்பழகன் பதில்

சென்னை:

மிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் தமிழக அரசு மீது குற்றம் சாட்டிய நிலையில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

அப்போது, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வது ஆளுநர்கள்தான் என்றும், அதற்கும் உயர் கல்வித்துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார்.

இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  தமிழக கவர்னர் பன்வாரிலால், தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவதில், பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது. இது எனது கவனத்திற்கு வந்ததாகவும், ஒருவரின் தகுதி அடிப்படையிலேயே துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும் என்றும், தகுதியின் அடிப்படையிலேயே தற்போது துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

ஆளுநரின் இந்த அதிரடி குற்றச்சாட்டு தமிழக ஆட்சியாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது, தமிழக பல்கலைக்கங்களுக்கு வேந்தர்கள் நியமனம் செய்யப்படுவது கவர்னரால் மட்டுமே. இதில் தமிழக அரசுக்கோ, உயர்கல்வித் துறைக்கோ சம்பந்தம் இல்லை. தேடுதல் குழு அமைப்பதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது.  ஆளுநர் எதை மனிதில் வைத்து இப்படி பேசினார் என்று தெரியவில்லை என கூறினார்.