டில்லி:

டைபெற இருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், பாரதியஜனதா சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ண காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவருடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள், திமுக மற்றும் மம்தா கட்சி,  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதா தளம் திரினாமுல் காங்கிரஸ் உள்பட கட்சிகளை சேர்ந்த  தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் அவர் வேட்பு மனுதாக்கல் செய்தார்.