இளையராஜாவின் கொரோனா பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த பாடலுக்குத் துணை ஜனாதிபதி பாராட்டு

டெல்லி:

பாரத பூமி புண்ணிய பூமி நாம் அதை மறந்திட வேண்டாம் என இளையராஜா இசையமைத்த  கொரோனா பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாடலுக்குத் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டுத் தெரிவித்து உள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சுயநலமின்றி, இரவு பகல் பாராது, ஊரங்கு காலத்திலும் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையாக, இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்து பாடி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போர்வீரர்களுக்கு  நன்றி சொல்லும் வகையில் இசைஞானி இளையராஜா உருவாக்கிய  பாரத பூமி என்ற பாடல் வெளியிட்டு, அதை கொரோனா போர் வீரர்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.

இந்தப் பாடலுக்கு துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு பாராட்டு தெரிவித்திருப்பதுடன்,  தங்களுடைய ட்விட்டர் தளத்திலும்  பகிர்ந்துள்ளனர்.