திருப்பதியில் துணை ஜனாதிபதி :  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திருப்பதி கோவிலில் நாளை விடிகாலை தரிசனம் செய்ய உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு நாளும் விடிகாலையில் சுப்ரபாத தரிசனம் நடைபெறுகிறது.   அந்த தரிசனத்துக்கு பக்தர்கள் பலர் திரளாக வருவது வழக்கம்.   தற்போது சுப்ரபாத தரிசனம் செய்ய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு  ரேணிகுண்டா விமான நிலையம் வந்துள்ளார்.

இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று மாலை ரேணிகுண்டா வந்துள்ள வெங்கையா நாயுடு நாளை விடிகாலை சுப்ரபாத தரிசனம் செய்ய உள்ளார்.    துணை ஜனாதிபதியின் வருகையினால் திருப்பதி மற்றும் திருமலையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: vice president came to tirupathi for balaji darshan
-=-