சென்னை:

துணை ஜனாதிபதி தேர்தலில்  எதிர்கட்சிகளின் சார்பில்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார்.

ஜனாதிபதி தேர்தல்  வருகிற 17-ம் தேதி நடைபெறவுள்ளது. பா.ஜ.க சார்பாக  ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக மீரா குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து துணைஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5ந்தேதி நடைபெற உள்ளது.

இதில் எதிர்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், ஆளுங்கட்சி சார்பில் இன்று வேட்பாளர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சென்னை வந்துள்ள கோபாலகிருஷ்ண காந்தி,  சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு நேற்றிரவு சென்று கருணாநிதியை சந்தித்து திமுகவின் ஆதரவை கோரினார். அப்போத  புத்தகம் ஒன்றை கருணாநிதிக்கு கோபாலகிருஷ்ண காந்தி பரிசாக வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.