Random image

தமிழக ஆசிரியை ஸதி-க்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் துணைஜனாதிபதி

டில்லி:

சிரியர் தினத்தை முன்னிட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு  தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

இதில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஸதிக்கு துணைஜனாதிபதி நல்லாசிரியர் விருதை வழங்கி கவுரவித்தார்.

முன்னாள் குடியரசுத்தலைவர்  சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும்  ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில்  ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  இவர்களில், தமிழகத்தை சேர்ந்த ஸதி என்ற ஆசிரியையும் ஒருவர்.

இவர்    கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸதி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிப்புரிந்து வரும் ஆர்.ஸதி, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும், `குட்டி கமாண்டோ’ திட்டம் போன்றவற்றின் மூலம் எண்ணற்ற மாற்றங்களை தனது பள்ளியில் செயல்படுத்தினார். இவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்தனர். இவரின் பல்வேறு முயற்சிகள் மூலம் அவரது கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றி உள்ளார்.

இதற்காக அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக  நேற்று நடந்த விழாவில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.