ஜிசாட்-29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் – பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி பாராட்டு

ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

isro

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிபன் கூறுகையில், ” விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்தியாவின் அடுத்த மைல்கல் இது ” என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் மொடி டுவிட்டரில் கூறுகையில், ” ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது இரட்டிப்பு வெற்றி ” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜிஎஸ்எல்வி மார்க் – 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்ரும் வடகிழக்கு மாநிலங்களில் தகவல் தொடர்பு மேம்பட உதவும் என பதிவிட்டுள்ளார்.