தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பர்: தமிழக அரசுக்கு விருது

டில்லி:

மிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக  விருது வழங்கப்பட்டு  உள்ளது. மேலும், செயல்திறன், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் சிறந்த மாநிலங்கள் என்ற பிரிவில் தமிழக அரசுக்கு விருது கிடைத்துள்ளது.

இந்த விருதுகளை துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வரிடம் வழங்கினார்.

பிரபல ஊடக நிறுவனமான இந்திய டுடே (India Today)  சார்பில் 2018-ம் ஆண்டிற்கான ஸ்டேட் ஆப் தி ஸ்டேட்ஸ் (State of the States)  என்ற தலைப்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, செயல்திறன், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் சிறந்த மாநிலங்கள் என்ற பிரிவில் தமிழகம் தேர்வாகி இருந்தது.

இந்த விருதுகளை டில்லியில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில்  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கலந்துகொண்டு  விருதினை வழங்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.

இந்த விருது 4வது முறையாக தமிழகம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

அதேவேலையில் வளர்ந்து வரும் சிறிய மாநிலங்கள் பிரிவில் புதுவை அரசு விருதுகளை குவித்துள்ளது. கல்வி, உள்கட்டமைப்பு, ஆரோக்கியம், விவசாயம் ஆகிய பிரிவுகளில் புதுவை அரசிற்கு விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, அஸாம் முதல்வர் சர்பநந்தா சொனவால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதல்வர், இதுபோன்ற விருதுகளை பெறுவதன் மூலம் தமிழகம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்றும், கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது எனவும் பெருமையுடன்  தெரிவித்தார்.