புதுவைக்கு கூடுதல் நிதி பெற்றுத்தர துணைஜனாதிபதியிடம் கோரிக்கை: நாராயணசாமி

புதுச்சேரி:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணாக புதுச்சேரி வந்துள்ளார். அவரை புதுவை முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், கவர்னர் கிரண்பேடி வரவேற்றனர்.

புதுச்சேரி வருகை தந்துள்ள துணைகுடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி,  புதுச்சேரிக்கு கூடுதல் நிதி பெற்றுத்தர குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம்  கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரி அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி கிடைக்காததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஆகிறது என்று தெரிவித்தாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதி வெங்கையா நாயுடு இன்று புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் வந்து, அங்கிருந்து  கார் மூலம் காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

அங்கு  மாணவர்களுடன் கலந்துரையாடிய வெங்கையாநாடு, நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கவர்னர் மாளிகை சென்றார்.

இன்று மாலை இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் கட்டப்பட்டு உள்ள உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம், விடுதி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை கம்பன் கலையரங்கில் நடைபெறுகிறது. அதில் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் மீண்டும் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.