குஜராத் அரசு வழங்கிய ரூ.5 லட்ச இழப்பீட்டை மறுத்த இஸ்லாமியப் பெண்

--

அகமதாபாத்: குஜராத் அரசால் தனக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்ச இழப்பீட்டுத் தொகையை, 2002ம் ஆண்டு கலவரத்தின்போது கூட்டு வன்புணர்வுக்கு ஆளான பில்கிஸ் பனோ என்ற இஸ்லாமியப் பெண் வாங்க மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தனக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டுமென பில்கிஸ் பனோ தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது ஆஜரான குஜராத் அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசு சார்பாக ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதை தெரிவித்தார்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலோ, “இந்த வன்புணர்வு வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்த குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகளின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களின் ஒருவர் இந்த 2019ம் ஆண்டு ஜுன் மாதம் ஓய்வுபெறப் போகிறார்.

எனவே, அதுதொடர்பான விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும்” என்றனர். இதனையடுத்து அடுத்துவரும் ஏப்ரல் 23ம் தேதி, இந்த வழக்கு விசாரணை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி