பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 32ஆண்டுக்கு பிறகு இன்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றிக்கோப்பையை அணியின் கேப்டன், ரஹானே, தமிழகத்தைச் சேர்ந்த இளம்வீரரான நடராஜனின் கைகளில் கொடுத்து அழகு பார்த்தார். இது தமிழக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ரஹானேவின் இநத்  நடவடிக்கை சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், இந்திய வீரர்கள், ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

32 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மைதானத்தில் முதன்முறையாக ஆஸ்திரேலியாக தோல்வியை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, இந்திய அணிக்கு,  ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.

இந்த  கோப்பையை இந்திய அணி கேப்டன் ரஹானே பெற்றுக் கொண்டார். அத்துடன், இளம்வீரரான, தமிழக வீரர் டி நடராஜனை அழைத்த ரஹானே, வெற்றிக் கோப்பையைஏந்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி டி நடராஜன் கோப்பையை ஏந்தி நிற்க இந்திய அணி வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

ஆஸ்திரேலியக தொடரில், இந்தத் தொடரில் அறிமுகமாகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய டி நடராஜனிடம் ரஹானே கோப்பையை ஏந்தச் சொன்னது, கிரிக்கெட் ரசிகர்களிடமும், ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. இளம் வீரரை கவுரவிக்கும் வகையில், ரஹானே செய்த செயல்  மெய்சிலிர்க்க வைத்தது.