“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையிஸி சகஜம்!”:  பிரதமர் மோடி

வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள் என  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் மிசோரமில் எம்.என்.எஃப் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸும், தெலங்கானாவில் சந்திரசேகர் ராவும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ்  இடையே இழுபறியான நிலை நிலவுகிறது.

அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதை வைத்துப் பார்க்கும்போது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது கண்கூடு.

இந்நிலையில் இத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஐந்து மாநில தேர்தல்களில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி,  ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகள். இன்றைய முடிவுகள் மக்களுக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கடினமாக உழைக்க உத்வேகம் அளிக்கும். ஐந்து5 மாநில தேர்தல்களில் இரவு, பகல் பாராமல் உழைத்த பாஜகவினரையும் வணங்குகிறேன்” என்று மோடி தெரிவித்திருக்கிறார்.