ரஞ்சி டிராபி: முதன்முறையாக சாம்பியன் ஆனது விதர்பா

இந்தூர்,

ன்று நடைபெற்ற ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் டில்லி அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது விதர்பா.

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்தூரில் கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் டில்லி, விதர்பா அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது.

ரஞ்சி கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் களத்தில் இறுதிப்போட்டிக்கு இறங்கியது. ரஞ்சி கோப்பை வரலாற்றில்  முதன் முதலாக விதர்பா அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அதையடுத்து, கோப்பையை கைப்பற்ற முனைப்புடன் விளையாடியது.

இன்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற விதர்பா அணி பீல்டிங் தேர்வு செய்தது. டில்லி அணி மட்டையை பிடித்து களத்தில் குதித்து. முதல் இன்னிங்சில விதர்பா அணியின் ராஜ்னீஷ் குர்பானியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல்  295 ரன்னில் சுருண்டது.

அதையடுத்து விதர்பா அணி ஆட்டத்தை  தொடங்கியது. தொடக்க வீரர் பைஸ் பாசல் (67), வாசிம் ஜாபர் (78), சர்வாத் (79) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், அக்சய் வாத்கரின் அபார சதத்தாலும் விதர்பா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 528 ரன்கள் குவித்திருந்தது. அக்சர் வாத்கர் 133 ரன்னுடனும், நேரல் 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாத்கர் நேற்றைய 133 ரன்னிலேயே வெளியேறினார். நேரல் 74 ரன்கள் எடுக்க விதர்பா 163.4 ஓவரில் 547 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

டில்லி அணி சார்பில் சாய்னி அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

விதர்பா அணி முதல் இன்னிங்சில் டில்லியை விட 252 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் டில்லி அணி 252 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

சண்டேலா, காம்பீர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சண்டேலா 9 ரன்கள் எடுத்த நிலையில் வகார் பந்தில் ஆட்டமிழந்தார். காம்பீர் 36 ரன்கள் எடுத்த நிலையில் குர்பானி பந்தில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஷோரோ, ராணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஷோரே 62 ரன்களும், ராணா 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க டில்லி அணி தடுமாற ஆரம்பித்தது.

கேப்டன் ரிஷப் பந்த் 32 ரன்களும், விகாஸ் மிஸ்ரா 34 ரன்களும் சேர்க்க டெல்லி அணி 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வித்ர்பா அணி சார்பில் வாகர் 4 விக்கெட்டும், சர்வாத் 3 விக்கெட்டும், குர்பானி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஒட்டுமொத்தமாக டெல்லி 28 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் விதர்பா அணிக்கு 29 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

விதர்பா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையையும் கைப்பற்றி விதர்பா சாதனைப் படைத்துள்ளது.

முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2 இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தி ராஜ்னீஷ் குர்பானி ஆட்டநாயகன் விருது பெற்றார்.