வீடியோ கேம் வெறி :  மனநோயின் அறிகுறி

 

நியூயார்க்

வீடியோ கேம் மீது வெறியாக இருப்பது ஒர் வகை மனநோயின் அறிகுறி என உலக சுகாதார மையம் கூறி உள்ளது.

மொபைல் ஃபோன்கள் என்பது ஒரு காலத்தில் எங்கு சென்றாலும் தொடர்பு கொள்ள வசதியாக இருந்தது.   தற்போது ஸ்மார்ட் ஃபோனில் வருகையால் தொடர்பு என்பது இரண்டாம் நிலைக்கு சென்றுள்ளது.   சிறுவர்கள் ஆரம்ப காலத்தில் மொபைலில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.  தற்போது வயது வித்யாசமின்றி வீடியோ கேம் மோகம் அனைவரையும் பிடித்துள்ளது.

இவ்வாறு பொழுது போக்காக ஆரம்பிக்கப்படும் வீடியோ கேம்கள் மெல்ல மெல்ல அடிக்கடி விளையாட தூண்டுகிறது.   சிறிது சிறிதாக அந்த விளையாட்டுகளுக்கு மனிதர்கள் அடிமையாகி விடுகின்றனர்.   ஒரு கட்டத்தில் அது ஒரு வெறியாகவே மாறி விடுகிறது.     பலர் இந்த வீடியோ கேம் வெறியினால்  தங்க:ளின் கடமைகளையும் சரிவர முடிக்காமல் விளையாட்டில் ஆழ்ந்து விடுவதைக் காண முடிகிறது.

இதனால் கடமைகளை முடிக்க முடியாமல் வேலப்பளு அதிகம் உண்டாகிறது.   தேவையற்ற மன உளைச்சல் உண்டாகிறது.   அந்த மன உளைச்சலைப் போக்க மீண்டும் இதே விளையாட்டுக்களையே உபயோகிக்கன்றனர்.   இது மேலும் வெறியை தூண்டுகிறது.    இவ்வாறு விடியோ விளையாட்டு வெறியில் பாதிக்கப்படுபவர்களால் மற்றவர்களுடன் சரியாக பழக முடியாததால் நட்பு வளையம் குறையத் தொடங்கி  ஒரு கட்டத்தில் நண்பர்களே இல்லாத தனித்தீவாக மாறி விடுகின்றனர்.

அமெரிக்க சைக்கியாட்ரிக் அசோசியேஷன்  உலகம் முழுவதும் 7% பேர் இவ்வாறான பாதிப்புக்கு  உள்ளாகியதாக  தெரிவித்துள்ளது.   இந்த தகவல்  ஓரளவு பழைய தகவல் என்பதால் தற்போது இது மேலும் பல மடங்கு அதிகரித்திருக்கும் என உலக சுகாதார மையம் கூறி உள்ளது.

இது குறித்து இந்திய மனநலக் குழுத் தலைவர் பிரசாத் ராவ், “புளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள் பல உயிர்களைக் கொன்றுள்ளது.   இவ்வாறு விளையாடுவதை தடுக்க பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை சரிவர கண்காணிக்க வேண்டும்.  குறைந்த பட்சம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மிகவும் கண்காணித்தாக வேண்டிய நிலையில் தற்போது சமுதாயம் உள்ளது” எனக் கூறி உள்ளார்.

உலக சுகாதார மையம்,  ”மொத்தத்தில் இந்த வீடியோ கேம் வெறி தனி நபர் வாழ்வை மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முறைகளை பெரிதளவில் சீரழிக்கிறது.    இவ்வாறு இந்த விளையாட்டு வெறி என்பது மனநோய்க்கான அறிகுறி என்பதை மக்கள் உணர வேண்டும்.    இந்த விளையாட்டை சரிவர விளையாடாத பலருக்கும் குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம் போன்றவை உண்டாகிறது.

இந்த அறிகுறியைக் கண்டதுமே குணப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.   அவ்வாறு செய்யவில்லை எனில் நிலைமை மிகவும் மோசமடையும்.    இதனால் அந்த வீடியோ கேம் வெறி கொண்டர்வகளின் வாழ்வு மட்டும் இன்றி உடன் இருப்பவர்களின் வாழ்வும் பாதிப்படையும்.   எனவே இந்த விளையாட்டுக்களை ஆரம்பத்திலேயே இனம் கண்டு விலக வேண்டியது மிக மிக அவசியம்” என தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: video game addiction is a sort of mental disorder : WHO
-=-