ரிஷி கபூர் வீடியோ விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை…..!

 

கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர். ஏப்ரல் 30 காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கம் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் ஐசியூவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது யாரோ ஒரு மருத்துவமனை ஊழியர் அதை மறைந்திருந்து வீடியோ எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை சமூக வலைதளங்களில் பகிரவும் செய்திருக்கிறார் அந்த வீடியோ வைரலாக பரவியது .

இந்நிலையில் ரிஷி கபூர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவல் எங்கள் கவனத்துக்கு வந்தது. எங்கள் மருத்துவமனையை பொறுத்தவரை நோயாளியின் தகவல்களை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

இது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.