துக்க வீட்டில் அழுதுகொண்டிருந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிய குரங்கு! வைரலாகும் வீடியோ…

பெங்களூரு:

ர்நாடகாவில், ஒருவரின் இறுதிச்சடங்கில் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த பெண்களிடையே வந்த குரங்கு ஒன்று, ஒரு பெண்ணின் கன்னத்தில் தட்டி ஆறுதல் கூறிய நிகழ்ச்சி, அங்கிருந்தவர்களியே நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தின்  நார்கன்ட் என்ற பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும்,அவரது உறவினர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். அங்கு  இறுதி சடங்கிற்கான வேலை நடந்து கொண்டிருந்த போது,  பெண்கள் சிலர் கதறி அழுது கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று, அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணின் தோளில் கை வைத்து, அவரது கன்னத்தில் தட்டிக்கொடுத்தது.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை சிலர் தங்களது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.