உத்தரப்பிரதேசம் : மகனின் முன்பு பாஜக எம்பியால் மிரட்டப்பட்ட இஸ்லாமிய வியாபாரி

சைகர்கஞ்ச், உத்தரப்பிரதேசம்

ஸ்லாமிய வியாபாரி ஒருவரை அவர் மகன் முன்பு பாஜக எம் பி பிரிஜ் பூஷன் மிரட்டும் காட்சி வைரலாகி வருகிறது.

உபி மாநிலத்தில் உள்ள சைகர்கஞ்ச் தொகுதியின் மக்களவை உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர் தொடர்ந்து பல முறை சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்.

சில மாதங்கள் முன்பு அவர் பாஜக தலைவர்களையே குறை கூறி பேசி உள்ளார்

அவர் பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகி மட்டுமே ஊழல் செய்யாதவர் எனத் தெரிவித்தார்

இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

சமீபத்தில் அவர் தெருவில் மகனுடன் செல்லும் இஸ்லாமிய வியாபாரியை மிரட்டி உள்ளார்.

இந்த காட்சி வீடியோ  படமாக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இஸ்லாமிய வியாபாரியின் பெயரை பிரிஜ்பூஷன் கேட்கிறார்.

வியாபாரி தயங்குவதால் அருகில் உள்ள சிறுவனான வியாபாரியின் மகனிடம் பெயரைக் கேட்கிறார்.

பெயரை சொல்லாவிட்டால் அடித்து விடுவேன் என மிரட்டுகிறார்.

அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் இந்த பக்கமே வரக்கூடாது என பிரிஜ்பூஷன் மிரட்டி அங்கிருந்து விரட்டுகிறார்.

பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து பிரிஜ்பூஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி