தூக்கிட்டு இறந்து போன பாலிவுட் நடிகை ஜியா கானுடன் மகேஷ் பட் ; வைரலாகும் வீடியோ….!

கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என அவரது குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது .

ரியா சக்ரவர்த்தி (Rhea Chakraborty) சுஷாந்தின் உத்தரவின் பேரில் தான் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என பேசப்பட்டு வருகிறது . இந்த உறவில் சுஷாந்த் மகிழ்ச்சியடையவில்லை என்றும் இப்போது கூறப்படுகிறது. ஆனால் ரியா சக்ரவர்த்தி மற்றும் மகேஷ் பட் (Mahesh Bhatt) ஆகியோரின் வாட்ஸ்அப் சாட் வைரலாகிய பின்னர், ரியா தானே சுஷாந்திலிருந்து பிரிந்துவிட்டார் என்று ஊகிக்கப்பட்டது.

அதே நேரத்தில், இப்போது மகேஷ் பட்டின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பெருகிய முறையில் வைரலாகி வருகிறது, அதில் அவர் ஜியா கானுடன் காணப்படுகிறார். பாலிவுட் நடிகை ஜியா கான் 3 ஜூன் 2013 அன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு இறந்தார்.

இந்த வைரல் வீடியோவில் ஜியா கானுடன் மகேஷ் பட் (Mahesh Bhatt) மிகவும் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் காணலாம்.