டவா, உத்தரப்பிரதேசம்

ன நிலை பிறழ்ந்தார்போல் காணப்படும் ஒரு நபரைக் காவலர்கள் இருவர் கண் மூடித் தனமாக தாக்கி கொடுமை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் எடவா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில்  இரு காவலர்கள் மன நிலை பிறழ்ந்தவர் போல் காணப்படும் ஒருவரை நேற்று தாக்கி உள்ளனர்.   இந்த காட்சி படமாக்கப்பட்டு சமூக வலைத் தளங்களில் வைரலாகி பலரையும் திடுக்கிட செய்துள்ளது.   இந்த வீடியோ சமாஜ்வாதி கட்சியின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் வெளியாகி உள்ளது.க்

இந்த வீடியோ காவல்துறை கான்ஸ்டபிள் ஒரு நபரை பூட்ஸ் காலால் முகத்தில் உதைப்பதுடன் ஆரம்பிக்கிறது.  தரையில் விழுந்து கிடக்கும் அவரது நெஞ்சில் தனது பூட்ஸ் காலால் அழுத்தியபடி காவலர் ஒரு தடியால் அடித்து நொறுக்குகிறார்.  அடிபடுவர் வலியால் கதறியபோதும் நிறுத்தாமல் அவர் அடிக்கிறார்.   அடிபட்ட மனிதர் தன்னை மன்னிக்குமாறு கதறுகிறார்.

அடிக்கடி அடிபட்டவர் பிரதான் ஜி என யாரையோ அழுதபடி அழைக்கிறார்.  அவர் கிராம தலைவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.   அந்த வீடியோ முடிவடையும் போது மற்றொரு காவலரும் இணைந்து இருவருமாக அந்த நபரை அடித்து விளாசுகின்றனர்.

இது குறித்து காவல்துறை, “அடிபட்ட மனிதர் பெயர் சுனில் யாதவ ஆகும்.  அவர் போதைமருந்து அடிமை. என்பதால் கிராம மக்களை தாக்கி வந்தார்.  அதில் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சுனிலை கைது செய்யச் சென்ற காவலர்களைக் கத்தியால்  தாக்க முயன்றார்.  எனவே குறைந்த பட்ச பலத்தை காட்டி காவலர்கள் அவரை கைது செய்தனர்.” என விளக்கம் அளித்துள்ளது.

அதன் பிறகு மற்றொரு மூத்த காவல் அதிகாரி எடவா காவல்துறை தலைவருக்கு அளித்த தகவலில் காவலர்கள் மிகவும் கடுமையாக அந்த நபரைத் தாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் அடிபட்ட நபர் ஆக்ராவில் ஒரு மன நல மருத்துவமனையில் இரு வருடம் முன்பு சிகிச்சை பெற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த வீடியோவில் காணப்படும் இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=fZhHzs8jOEY]