பள்ளி பிரார்த்தனையில் மிட்டாய் தின்னும் சிறுவன் : பலருடைய மலரும் நினைவுகள் வீடியோ

டில்லி

ரு சிறுவன் பள்ளி பிரார்த்தனையின் போது ஒரு குச்சி மிட்டாயைச் சாப்பிடும் சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது.

குழந்தைகள் எது செய்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கும்.   அதனால் தான் அந்தக் கால பேபி ஸ்ரீதேவி முதல் இந்தக் கால பேபி நைனிகா வரை குழந்தை நட்சத்திரங்கள் பெரும் புகழ் பெற்று விளங்குகின்றனர்.   அவ்வளவு ஏன் உலகநாயகன் எனப் புகழப்படும் கமலஹாசனும், தமிழ் திரையுலகைக் கலக்கிய குஷ்புவும்  குழந்தை நட்சத்திரமாகத் திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் தான்.

டிவிட்டரில் பல சுவாரசியமான  தகவல்கள், வீடியோக்கள் பதிவாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.    இந்த தகவல்கள் மற்றும் வீடியோக்களை பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.  அவ்வகையில் தற்போது ஒரு சிறுவனின் வீடியோ  பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு பள்ளியில் காலை வேளையில் பிரார்த்தனை நடைபெறுகிறது.  ஒரு சிறுவன் மற்ற குழந்தைகளைப் போல் பாட்டுப்  பாடுகிறான்.  ஆனால் கூர்ந்து கவனிக்கும் போது அவன் கையில் ஒரு குச்சி மிட்டாய் வைத்தபடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை வாயில் வைத்து சுவைக்கிறான்.

இந்த வீடியோவை பகிரும் பலரும் இது தங்கள் குழந்தைப் பருவத்தை நினைவு படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகை.காம் வாசகர்களுக்காக அந்த வீடியோ இதோ :