ஐதராபாத் நகரில் சிறுத்தை அட்டகாசம் : வைரலாகும் வீடியோ

தராபாத்

தராபாத் நகரில் ஒரு நபரை சிறுத்தை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

ஊரடங்கு அறிவிக்கபட்ட்ட்டதில் இருந்து பல காட்டு மிருகங்கள் ஆளரவமற்ற சாலைகளில் சுற்றித் திரிவது அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் ஐதராபாத் நகரில் சிறுத்தை ஒன்று அலைந்து வருவதாக தகவல்கள் வெளியாகின

தேசிய நெடுஞ்சாலையில்  சிறுத்தை காணப்பட்டதாக வெளியான தகவலையொட்டி வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள்  சிறுத்தை தப்பி விட்டதால் அதைத் தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது

இந்நிலையில் ராஜேந்திர நகர் பகுதியில் ஒரு நபரைச் சிறுத்தை தாக்கும் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு நபரை தாக்கிய சிறுத்தையைத் தெரு நாய்கள் விரட்டுவதும் அது எதிர்ப்பதும் பதிவாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி