ண்டிகர்

ஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் குக்கு ஒரு சிறுவன் ஊரடங்கு விதி மீறல் குறித்து புகார் அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  பல இடங்களில் ஊரடங்கு விதி மீறல் நடைபெற்று வருகிறது.  தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் டிரோன் காமிரா மூலம் கண்காணிப்பு நடைபெறுகிறது.  ஆயினும் பலர் கொரோனா தாக்கம்  உணராமல் விதி மீறலில் ஈடுபடுகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் அவ்வாறு விதி மீறுவோர் பற்றி ஒரு சிறுவன் முதல்வர் அமரீந்தர் சிங் இடம் புகார் அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் ஐந்து இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடக் கிளம்புகின்றனர்.   அதை மாடியில் இருந்து ஒரு சிறுவன் பார்க்கிறான்.  அந்த இளைஞர்களிடம் ஊரடங்கு விதி மீறல் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறான்.  அவர்கள் சிறுவன் சொல்வதை மதிப்பதில்லை.

உடனே அந்த சிறுவன் மொபைல் மூலம் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இடம் வீடியோ கால் மூலம் அழைக்கிறான்.  அவரிடம் இங்கே சிலர் ஊரடங்கு விதிமீறல் செய்வதாகப் புகார் அளிக்கிறான்.  அதைக் கேட்ட முதல்வர் அந்த இளைஞர்களிடம் மொபைலை அளிக்குமாறு சொல்கிறார்.  கிரிக்கெட் விளையாடச் செல்லும் இளைஞர்களை வழி மறித்து சிறுவன் மொபைலை அளிக்கிறான்.

அந்த இளைஞர்களுக்கு முதல்வர் அமரிந்தர் சிங் ஊரடங்கு விதிமீறல் தவறு என அறிவுரை சொல்கிறார்.  அதைக் கேட்ட் இளைஞர்கள் மனம் மாறுகின்றனர்.   அனைவரும் வணக்கம் செலுத்துவதுடன் வீடியோ முடிவடைகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=YTWXy5M9Mc8]