யானையின் மீது யோகா : கீழே விழுந்த பாபா ராம்தேவ்

ரித்வார்

பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் யானை மேல் அமர்ந்து யோகா செய்யும் போது கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல யோகா ஆசிரியரும் பதஞ்சலி நிறுவன உரிமையாளருமான பாபா ராம்தேவ் விதம் விதமாக யோகா செய்வார்.

அவ்வகையில் சமீபத்தில் அவர் யானை மீது அமர்ந்து யோகாசனங்கள் செய்துள்ளார்..

அப்போது யானை வேகமாக நகரவே அவர் யானை மேல் இருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த பாபா ராம்தேவ் அந்த இடத்தை விட்டு வேகமாகச் சென்றுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.