இங்கிலாந்து : மேல் நோக்கி பாய்ந்த அருவியால் மக்கள் அதிர்ச்சி
யார்க்ஷைர் , இங்கிலாந்து
இங்கிலாந்து அருவி ஒன்று மேல் நோக்கி பாய்ந்த வீடியோ வைரலாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் புயல் தாக்குதல் நடந்தது. இந்த புயலால் நாட்டின் பல பகுதிகள் சேதமடைந்தன. பல இடங்களில் மரங்களும் கூரைகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் யார்க்ஷைர் பகுதியில் மாலெஸ்டன் மலை உள்ளது. இந்த மலையில் கம்பிரியா என்னும் அருவி உள்ளது. அருவியின் நீர் மலையில் இருந்து கீழே விழுவதற்கு பதிலாக புயல் காரணமாக மேல் நோக்கி பாய்ந்தது. இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.