சென்னை மெட்ரோ ரயில் : வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையே வெள்ளோட்டம் – வீடியோ
சென்னை
வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரயில் பாதையில் வெள்ளோட்டம் நடந்ததன் வீடியோ
சென்னை நகரில் மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான 9 கிமீ ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த பாதையில் இன்று ரயில் ஓட்டப்பட்டு வெள்ளோட்டம் நடந்துள்ளது. இந்த பாதை வரும் ஜனவரி மாத இறுதியில் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் வடசென்னை போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது வாசகர்களுக்காக அந்த வெள்ளோட்ட வீடியோ இதோ :