கணிதவியலாளர் சகுந்தலா தேவியாக களமிறங்கும் நடிகை வித்யா பாலன்…!

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து வித்யா பாலன் கணிதவியலாளர் சகுந்தலா தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்கவிருக்கும் படத்தில் சகுந்தலா தேவியாக நடிக்கிறார் .

இந்தப் படத்தை கேரளாவைச் சேர்ந்த அனு மேனன் இயக்குகிறார். சோனி பிக்சர்ஸ் மற்றும் அபுண்டான்டியா என்டர்டெயின்மென்ட் இதனை தயாரிக்கிறது.

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது .

இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள வித்யா பாலன், “உற்சாகம் ஒவ்வொரு நாளும் பெருகும்! கணித மேதைகளின் ‘வேரை’ தோண்டி எடுக்கும் நேரம் இது. #ShakuntalaDevi. #FilmingBegins” எனப் பதிவிட்டுள்ளார்.