ரஜினியுடன் நடிக்க மறுத்த ஹீரோயின்

பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை வித்யா பாலன் மறுத்திருப்பது கோலிவுட், பாலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கபாலி படத்துக்குப் பிறகு “எந்திரன் 2” படத்தில் நடிக்கத்துவங்கினார் ரஜினிகாந்த். அந்தப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினி தொடர்புள்ள காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து அடுத்த படத்தில் நடிக்க தயாரானார் ரஜினி.

இது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படம். இதில் ரஜினிக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினார் இயக்குநர் பா.ரஞ்சித். இதற்கு ரஜினியும் ஓகே சொன்னார்.

இதையடுத்து வித்யாபாலனை தொடர்புகொண்டு பேசினார் ரஞ்சித். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புகெகாண்டு, கால்ஷீட் அளித்தார். ஆனால் குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பை துவங்க முடியாத நிலை.

பிறகு தடைகள் நீங்கி, வரும் 28ம்தேதி  படப்படிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். இப்போது மீண்டும் வித்யாபாலனை தொடர்புகொண்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

வித்யாபாலனோ, “ஏற்கெனவே நான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கிவிட்டீர்கள். தவிர இப்போது நான் வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டேன். ஆகவே நடிக்க முடியாது” என்று தெரிவித்துவிட்டார்.

ரஞ்சித் தரப்பில், “இது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம். ஆகவே அட்ஜெ்ஸ்ட் செய்து கால்ஷீட் கொடுங்கள்” என்று கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு வித்யாபாலன், “ரஜினியுடன் நடிக்க மகிழ்ச்சியுடனே சம்மதித்தேன். அதே நேரம் பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற பேதம் எனக்கு இல்லை. சொன்னபடி நீங்கள் கால்ஷீ்ட்டை பயன்படுத்தவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் இணைந்து செயல்படுவோம்” என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம்.

இப்போது ரஜினிக்கு ஜோடியாக வேறு நடிகையை நடிக்கவைக்கும் முயற்சியில் இருக்கிறார் ரஞ்சித்