ஹனாய்: வியட்நாமில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் அந்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த நாடுகளில் ஒன்று தான் வியட்நாம். அந்நாட்டில் கடைசியாக இருந்த  கொரோனா நோயாளியும் குணமடைய பாதிப்பு முற்றிலும் இல்லை என்று அறிவித்து இருந்தது.
இந்நிலையில் மீண்டும் அந்நாட்டில் கொரோனா தொற்று கண்டறியய்பட்டு உள்ளது. அதனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை அனைவரும் கட்டாயமாக கடைபிடித்தால்தான் உலக நாடுகள் மத்தியில் கொரோனா இல்லாத நாடு என்ற பெயர் வாங்க முடியும் என வியட்நாம் அரசு குடிமக்களை அறிவுறுத்தி உள்ளது.
முன்னதாக ஜனவரி மாதம் வியட்நாமில் கொரோனா தாக்கம் துவங்கியது. கடந்த வாரத்தில் வெறும் 450 நோயாளிகளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தலைநகர் ஹனோயில் கட்டாய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.