வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் மரணம்

னோய்

வியட்நாம் அதிபரான டிரான் டாய் குவாங் இன்று மரணம் அடைந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வியட்நாம் அதிபராக டிரான் டாய் குவாங் தேர்வு செய்யப்பட்டார்.   அது முதல் அவர் அதிபராக பதவி வகித்து வருகிறார்.   சுமார் 61 வயதான அவர் உடல்நலக் குறைவால் அவதிபட்டு வந்தார்.

அதை ஒட்டி ஹனோய் வில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவரை உள்நாட்டு மருத்துவர்களும் சர்வதேச மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.   அவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் மரணம் அடைந்தார்.

கார்ட்டூன் கேலரி