வியட்நாமில் பெய்து வரும் கனமழை: பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

ஹனோய்: வியட்நாமில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 111 ஆக உயர்ந்துள்ளது.

வியட்நாமில் சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய வியட்நாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் நாடு முழுவதும் 7,200 ஹெக்டேருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

7 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.