அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல கோடி மோசடி: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு

சென்னை:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிதி முறைகேடு தொடர்பாக முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரத்தில் செயல்பட்டு வரும்  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாகவும், பணி நியமனம், ஓய்வூதியம் போன்றவற்றில்  முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, அது தொடர்பாக அண்ணாமல பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமநாதன், முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பல்கலைக்கழகத்தின் கணக்கில் இருந்து ரூ.11.25 கோடி எடுக்கப்பட்டு, அதை சுயநிதி கல்லூரிகளுக்கு மாற்றியிருப்பது லஞ்ச ஒதுப்பு துறை விசாரணையில்  தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்தே அண்ணாமலை பல்கலைக்கழக  முன்னாள் துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.