Random image

சட்டப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ஆவணங்கள் சிக்கின

சென்னை:

ட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காடி முடி வீட்டில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தற்போது வெளிநாட்டில் உள்ள அவரை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு, வெளிநாடு வாழ் இந்திய மாணவருக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அப்போதைய துணைவேந்தர் வணங்கா முடி மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  ஷெர்வானி, பாலாஜி, அசோக்குமார், ஜெயசங்கர், ராஜேஷ் உள்பட  6 பேர் மீது கடந்த ஆண்டு (2017) மார்ச் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தியது.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக வணங்காமுடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது வணங்காமுடி சார்பில் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப் பட்டது வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் ஆஜராகாகவில்லை.

இந்த நிலையில்  வணங்காமுடி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் லாக்கரைத் திறந்து, அதிலிருந்த முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, அவரை உடனடியாக இந்தியா திரும்பும் வகையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும்  அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து அவர் நாடு திரும்பியதும் கைது செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You may have missed